கிளிநொச்சி  வட்டக்கச்சி மாயவனூர் பிரதேசத்தில் அமைந்துள்ள புளுதியாறு குளத்திலிருந்து நெற்செய்கைக்கு தேவையான நீர்பாசனத்தை திறந்து விடுமாறு கோரி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றதாகவும் கலந்துரையாடலின் போது மக்கள் எதிர்ப்பு வெளியிட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, புளுதியாறு குளத்தில் இருந்து நீர் எடுக்கப்படுமாயின் பாரிய குடிநீர் நெருக்கடி ஏற்படும் எனவும் ஏற்கனவே குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பயிர்ச்செய்கை பாதிக்கப்படும் என்பதால் தாம் நீரை வழங்க முடியாது எனவும் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த கலந்துரையாடலின் போது, பிரதி நீர்பாசன பணிப்பாளர் சுதாகரன், கிளிநொச்சி மாவட்ட நீர்பாசன திணைக்கள பணிப்பாளர் செந்தூரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Comments

comments