ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கப்பட்ட வந்தாறுமூலை பிரதேசத்தில் தொலைக் காட்சியில் சனல் மாற்றிய சம்பவம் ஒன்றினால் அண்ணன் தங்கை இருவருக்கும் இடம்பெற்ற வாக்குவாதப் பிரச்சினையில் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று நேற்று (10) இடம்பெற்றுள்ளது.

வந்தாமூலை விஸ்வலிங்கம் குணாளன் (வயது 18) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் சேற்று இரவு சுமார் 08.30 மணியளவில் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிழந்தவரின் சடலம் செங்கலடி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரேத பரிசோதனை நிறைவடைந்ததும் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Comments

comments