முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவு வாகனங்கள் அதிக வேகத்துடன் பயணிப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு- பரந்தன், மாங்குளம், நெடுங்கேணி, ஆகிய பிரதான வீதிகளில் தினமும் வாகனங்கள் வேகக் கட்டுப்பாட்டை மீறி பயணிப்பதாகவும் இதனால் பொதுமக்கள் குறிப்பாக பாடசாலை மாணவர்கள் அச்சத்துடன் தமது பயணங்களை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் சில வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து வீதி சமிக்கைகளிலும் மின்கம்பங்களிலும் மோதி விபத்து ஏற்படுவதாகவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

இவ்விடயம் தொடர்பில் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Comments

comments