கிளி/ஊற்றுப்புலம் அ.த.க பாடசாலையில் இன்று (11.01.2016) காலை 9.30மணியளவில் கால்கோள் விழா நடைபெற்றது.

கிளி/ஊற்றுப்புலம் அ.த.க பாடசாலையின் அதிபர் தலமையில் ஆரம்பமான இந் நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள் , பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தரம் ஒன்று மாணவர்கள் புதிதாக பாடசாலைக்கு இணைந்த மாணவர்களை பூக்கோத்து கொடுத்து வரவேற்றதுடன் குழுப்பாடல், நடனம் என பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

மாணவர்களுக்கான கற்றல் உபகரணப்பொதியை வெளிச்சம் வாழ்வியல் வளர்ச்சி அமைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments