கிளிநொச்சி ஊற்றுப்புலம் பகுதியை சேர்ந்த வறுமை கோட்டின் கீழ் வசித்து வந்த பிறேம்குமார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு எம்மிடம் வந்து தனது மகனுக்கு (தனுஜனுக்கு) சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் எனவும் தம்மிடம் அவர்கள் கேட்க்கும் பணம் இல்லை எனவும் கூறியபோது உடனடியாக எமது இணையத்தில் செய்தி வெளியீட்டிருந்தோம்.

நன் கொடையாளர்களின் தொடர்பை ஏற்படுத்திகொடுத்துள்ளதுடன் புலம் பெயர்ந்த நம் உறவுகள் பலரும் உதவி புரிந்தனர்.இதன் காரணமாக இன்று இவ் சிறுவன் தொலைபேசி மூலம் எம்முடன் தொடர்பினை ஏற்ப்படுத்தி தனக்கு உதவி புரிந்த அனைவருக்கும் மற்றும் எமது இணையத்திற்கும்  என்றும் தான் கடமைப்பட்டுள்தாக  தனுஜன்  தெரிவித்தார்.

Comments

comments