தனியார் பஸ் ஒன்றில் பயணித்த கர்ப்பிணி பெண் ஒருவரை பஸ் சாரதி கொடுமைப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஸ்ஸில் பயணித்த கர்ப்பிணி பெண் தனது தாயாருடன் வைத்தியசாலைக்கு செல்லும் போது, சுகயீனமடைந்த நிலையில் பஸ்ஸில் வாந்தி எடுத்துள்ளார்

எப்படியிருப்பினும், சம்பவத்தின் போது பஸ்ஸின் நடத்துனராக கடமையாற்றிய பஸ்ஸின் உரிமையாளர், மிஹிரிகம நகரத்திற்கு பஸ் வந்தவுடன் அதனை சுத்தப்படுத்துமாறு குறித்த கர்ப்பிணி பெண்ணை கட்டாயப்படுத்தியுள்ளார்.

தனது தாயாரின் உதவியுடன் பஸ்ஸினை குறித்த பெண் சுத்தப்படுத்தியுள்ளார்.

இதன் காரணமாக வைத்தியசாலை செல்லும் நடவடிக்கையும் தடைப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு மேல் மாகாணம் – வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

அந்த பெண் கொட்டதெனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். அதன் பின்னர் பஸ் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Comments

comments