பாடசாலை மாணவி ஒருவரை திருமணம் செய்ய வைத்த பெற்றோர் பிபில பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் 15 வயது சிறுமி அவரின பெற்றோரினால் 20 வயது இளைஞருக்கு இரகசியமாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.

மொனராகலை மாவட்டத்திலுள்ள பிபில, மெதகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

மெதக பாடசாலையில் 9ஆம் தரத்தில் கல்வி கற்ற மாணவி ஒருவருக்கே இவ்வாறு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பிபில பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பகுதிக்கு கிடைத்துள்ள நிலையில் அந்த சிறுமி, இளைஞர் பெற்றோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரையும் பிபில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Comments

comments