தெஹிவளை மற்றும் வெள்ளவத்தைக்கு இடையிலான புகையிரத வீதி எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

குறித்த தகவலை புகையிரத திணைக்களம் கூறியுள்ளதுடன் புகையிரத நிலையத்திற்கு இரண்டிற்கும் இடையில் உள்ள பழைய பாலத்தை நீக்கிவிட்டு புதிய பாலம் அமைக்கப்பதற்கு நடவடிக்கை முன்னெடுப்பதாக புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் 23ம் திகதி இரவு 10 மணி முதல் 27ம் திகதி மாலை 4 மணி வரை புகையிரத வீதி மூடப்பட்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மாத்தறை, காலி மற்றும் அளுத்கமவில் இருந்து வரும் புகையிரதங்கள் தெஹிவளை வரையில் மட்டுப்படுத்தப்படும். இதேவேளை அந்தப் பகுதிகளுக்கான புகையிரத சேவைகள் தெஹிவளையிலிருந்து ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்படுகின்றது.

மேலும், கொழும்பு கோட்டையிலிருந்து ஆரம்பமாகும் புகையிரதங்கள் வெள்ளவத்தை வரை மட்டுப்படுத்தப்படும் என புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Comments

comments