கடந்த காலத்தில் விடுதலைப்புலிகளுடனான போர் வடக்கில் இடம்பெற்றபோது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெற்கில் துப்பாக்கிகளை வைத்து பூச்சாண்டி காட்டி வந்தார் என அமைச்சர் ராஜித சேனாரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கலந்துகொண்டபோதே சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரட்ன இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது பாரியளவில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பதாகவும், அதற்கு தற்போதைய அரசாங்கமானது வெள்ளை வேன் கலாச்சாரத்தினை மறுபடியும் கொண்டு வருவீர்களா என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவ்வாறானதொரு நடவடிக்கை தற்போதைய அரசுக்கு தேவையில்லை, அதனை விடுத்து எத்தனையோ வழிகள் தங்களுக்கு உள்ளது என கூறினார்.

குறிப்பாக பண்டாரநாயக்க ஆட்சிக்காலத்தில் வருடத்தின் முழு நாட்களும் அதாவது 365 நாட்களும் போராட்டங்கள் வெடித்தது.

9 வருடமாக முடங்கி கிடந்த மக்கள் தற்போது சுதந்திரமாக போராட்டம் செய்ய கரணம், நாட்டில் சுதந்திரம் காணப்படுவதாலேயே என தெரிவித்தார்.

மேலும், அந்தகாலங்களில் காணப்பட்டது போல வெள்ளைவேன் கலாச்சாரம் தற்போது இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் கோத்தபாய சண்டியர்தான், குறிப்பாக வடக்கில் யுத்தம் இடம்பெறும் வேளையில் கோத்தபாய தெற்கில் துப்பாக்கிகளை கொண்டு மிரட்டி சண்டித்தனத்தில் ஈடுபட்டார்.

குறிப்பாக வடக்கில் இடம்பெற்ற யுத்தத்திற்கு ஓரளவு பங்களிப்பினை மட்டுமே கோத்தா செய்தார், அதுவும் தெற்கில் இருந்தே செய்தார். போர்க்களத்தில் பெண்சேகா போன்றவர்களே செயற்பட்டனர் என கூறினார்.

Comments

comments