கிளிநொச்சி மாவட்ட பனைதென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் அங்கத்தவர்களாக இருந்து விபத்தின் போது உயிரிழந்த குடும்பங்களுக்கான மரணக் கொடுப்பனவுகள் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான உதவித்தொகைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உதவித்தொகை வழங்கி வைக்கும் நிகழ்வானது கிளிநொச்சியில் பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இச்சங்கத்தின் உறுப்பினர்களின் நலன்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களுக்காக தொழிலின் போதும் விபத்தில் மரணம் அடைதல், மற்றும் தொழில் ரீதியாக நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிட்டவர்களின் குடும்பங்களுக்கு மரணக்கொடையும் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கான நலத்திட்டக்கொடுப்பனவுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துக்கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் விபத்தின் போது உயிரிழந்த குடும்பங்களில் ஒரு குடும்பத்திற்கு பதினைந்து இலட்சம் ரூபாவும் தொழில் நிமித்தம் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த குடும்பம் ஒன்றுக்கு பத்து இலட்சம் ரூபாவினையும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பனை தென்னை வள கூட்டுறவுச்சங்கத்தின் அங்கத்தவர்கள் பணியாளர்கள் எனப்பலரும் கலந்துக் கொண்டனர்.

Comments

comments