முல்லைத்தீவு, உடுப்புக்குளம் பகுதியில் தனிமையில் வாழும் 51  வயதுடைய  பெண்ணொருவரின் வீட்டில் புகுந்த திருடர்கள், 53 ஆயிரம் பணம் மற்றும் பொருட்களை களவாடிச் சென்றுள்ளனர்.

மாலை 4.30  மணியளவில்  அயல் வீடொன்றுக்கு சென்று பெண், இரவு 7.30 மணியளவில் வீடுதிரும்பிய போது, வீட்டுக் கூறை உடைக்கப்பட்டிருந்ததை கண்டுள்ளார். அத்துடன், வீட்டிலிருந்த பணம் உள்ளிட்ட பொருட்கள் திருட்டுப்போனமை தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில், முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.

Comments

comments