இளம் தாய் ஒருவரின் தவறினால் பிறந்து 14நாள் ஆண்சிசுவொன்று உயிரிழந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. சிசுவிற்கு வழங்கிய மருந்து வில்லையே உயிரிழப்பிற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். நல்லிணக்க புரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வசிக்கும் 23 வயதான பெண் ஒருவருக்கு கடந்த மாதம் 31ஆம் திகதி ஆண் குழந்தையொன்று பிறந்ததுள்ளது.

குழந்தை சுகதேகியாகவே இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், குழந்த 8 மாதத்தில் பிறந்த காரணத்தினால் குழந்தைக்கென சில மாத்திரை வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தாயாருக்கும் குருதி அழுத்தம் இருந்தமையினால் அவருக்கும் மாத்திரை வழங்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் கடந்த 13ம் திகதி மாலை குழந்தைக்கு தாயார் மருந்து கொடுத்துள்ளார்.

எனினும், மறு நாள் அதிகாலை 3 மணியளவில் குழந்தை மூச்சு விட சிரமப்படுவதனை தயார் அவதானித்துள்ளார். இதனையடுத்து, சிசுவை தாயார் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

சிசு மேலதிக சிகிச்கைளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குழந்தை தொடர்ச்சியாக அழுதுகொண்டிருந்தமையால் பதற்றமடைந்த அந்த இளம் தாய், குழந்தைக்கு கொடுக்கவேண்டிய மாத்திரைக்கு பதிலாக, தனக்கு வழங்கிய மாத்திரையை வழங்கியிருப்பதாக விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

Comments

comments