பாட­சாலை செல்லும் தனது மகனை உடைந்த போத்­தலால் குத்திக் கொலை செய்ய முயற்­சித்த தந்தை ஒரு­வ­ருக்கு பாணந்­துறை உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் பத்­மினி ரண­வக ஏழு வரு­ட­கால சிறை தண்­ட­னையும் 5,000 ரூபா அப­ராதம் விதித்து தீர்ப்­ப­ளித்தார். மொரட்­டு­வையைச் சேர்ந்த சுசந்த லலித் பெரேரா என்ற நப­ருக்கே இவ்­வாறு தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

2003 மார்ச் மாதம் 6 ஆம் திகதி இரவு தமது வீட்டில் வைத்து போத்தல் ஒன்றை உடைத்து அதன் ஒரு பகு­தியால் தனது மகனைக் குத்தி படு­கா­யப்­ப­டுத்தி கொலை செய்ய முயற்­சித்­த­தாக சட்­டமா அதி­பரால் சந்­தேக நப­ருக்கு எதி­ராக வழக்கு தொட­ரப்­பட்­டி­ருந்­தது.
சந்­தே­க­நபர் எப்­போதும் மது­போ­தையில் வந்து தனது தாயுடன் சண்­டை­யிட்­டுக்­கொள்­ளும்­போது மகன் தாயைக் காப்­பாற்­று­வதால் ஆத்­தி­ர­முற்ற சந்­தேக நபர், சம்­பவ தினம் அதிக மது­வ­ருந்­தி­விட்டு வீடு வந்து போத்­தலை உடைத்து மகனைக் குத்தி காயப்­ப­டுத்­தி­ய­தாக முறைப்­பாட்­டுத்­த­ரப்பு நீதி­மன்­றத்தில் தெரி­வித்­தது.
மொரட்­டுவ பொலிஸார் மொரட்டுவ நீதிமன்றத்தில் ஆரம்பக்கட்ட வழக்கு விசாரணையை மேற்கொண்டிருந்தனர்.

Comments

comments