விவசாய குடும்பங்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்துக்கு அமைய செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

மாதமொன்றுக்கு வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவாசய குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

மேற்படிக்கொடுப்பனவு மார்ச் மாதம் முதல் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வறட்சியால் 13 மாவட்டங்களில் விவாசய குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்தது.

குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நீரை விநியோகிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது.

இதேவேளை, நெற் செய்கையை மேற்கொள்ள முடியாமற்போயுள்ள விவசாயிகளை வேறு பணிகளில் அமர்த்தி கொடுப்பனவை வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments