தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் போட்டி நிகழ்ச்சிகளில் நேயர்களுக்கான கேள்வி போட்டியில் பணப் பரிசை வென்றுள்ளதாக கூறி பெண்களுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து பண மோசடி செய்யும் சம்பவங்கள் நடந்து வருவதாக தெரியவந்துள்ளது.

இப்படியான சம்பவங்கள் அனுராதபுரத்தில் அதிகளவில் நடப்பதாக கூறப்படுகின்றது.

அனுராதபுரத்தை சேர்ந்த பெரும்பாலான பெண்களுக்கு இப்படியான தொலைபேசி அழைப்புகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பதிவு கட்டணமாக 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபா பணத்தை ஈசி கேஷ் (easy cash) மூலம் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும் என தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் நபர்கள் கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பெண்கள் பெருந்தொகை பணத்திற்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்து வருவதாகவும் இவ்வாறான தொலைபேசி அழைப்புகளை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் எனவும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

comments