யாழ் மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான முறைப்பாடுகள் தொலைபேசியினூடாகவே அதிகளவில் கிடைக்கப் பெறுவதாக யாழ் மாவட்ட சிறுவர் விவகார பிரிவு வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கையில்

யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம் ஜனவரி தொடக்கம் ஒக்டோபர் வரை  சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக  207 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றுள் 1929 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக 26 முறைப்பாடுகளும் வேறு அலுவலக தொலைபேசி இலக்கத்தினூடாக 47 முறைப்பாடுகளும் என   தொலைபேசிகளினூடாக 73 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவற்றுள் பாடசாலைக்கு செல்லாத மாணவர்களுக்கு  எதிராக 32 முறைப்பாடுகளும், சிறுவயது திருமணம் தொடர்பாக 12 முறை ப்பாடுகளும், உடலியல் ரீதியான துஸ்பிரயோக முறைப்பாடுகள் 3, உளவியல் ரீதியான துஸ்பிரயோகம் 4, பாலியல் துஸ்பிரயோகம் 7,சிறுவர்  அலட்சியம் தொடர்பான முறைப்பாடு 9, குழந்தை தொழிலாளர்கள் தொடர்பாக  4 முறைப்பாடுகள், வேறு விதமான முறைப்பாடுகள் 2  என  மொத்தமாக 73 முறைப்பாடுகள் தொலைபேசிகளினூடாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனவே சிறுவர்கள்  துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவது குறித்து அறிந்தால் 1929 எனும் தொலைபேசி ஊடாக அறியத்தரலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Comments

comments