வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்காக வெளிநாட்டில் இருந்து அனுப்பப்பட்ட பணத்திற்கு என்ன நடந்தது என கேள்வி எழுந்துள்ளது.

வவுனியாவில் அண்மையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது வெளிநாட்டில் உள்ள ஒருவரால் ஒரு தொகை பணம் அப்போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவருக்கு அனுப்பியதாகவும்,

அதேவேளை அவர்களது குடும்பங்களுக்கு உதவுமாறு பிறிதொரு நபரிடம் ஒரு தொகை பணம் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இப் பணத்திற்கு என்ன நடந்தது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

ஆனால், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமக்கு அவ்வாறான பணம் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

Comments

comments