நாய்களை வீதியில் விட்டுச் செல்லும் நபர்களிடம் 25 ஆயிரம் ரூபா அபராத தொகையை அறவிடும் வகையில் சட்டத்தை கொண்டு வரவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் 6 மாத காலம் சிறைத் தண்டனை வழங்கவும் புதிய சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் பைஸர் முஸ்தபா கூறியிருந்தார்.

பொது இடங்களில் நாய்களை கொண்டு வந்து விட்டுச் செல்லும் நபர்களை அடையாளம் காண பாதுகாப்பு கெமராக்களை பொருத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Comments

comments