வடக்கில் பெற்றோரை இழ ந்த பிள்ளைகளுக்கு கிடைக்கவுள்ள வரப்பிரசாதம்!

வவுனியாவில் இயங்கும் (IT) தனியார் நிறுவனத்திற்கு கணணி துறையில் ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக வேலைக்கு தேவை

தொடர்புகளுக்கு : – 0778494381 , 0770805546 , 0757979492 , 0242052490 , 0242229151

வடமாகாணத்தில் தாய், தந்தையை இ ழந்த மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்காக புலமைப் பாிசில் திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் கூறியுள்ளாா்.

ஆளுநா் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பிலேயே அவா் இதனை கூறியிருக்கின்றாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் பெற்றோா் அதாவது தாய், தந்தை இருவரையும் இ ழந்த பிள்ளைகளுடைய கல்வி மேம்பாட்டுக்காக புலமைப் பாிசில் ஒன்றை உருவாக்க திட்டமிட்டு அதற்கான பூா்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் 5 மாவட்டங்களிலும் தாய், தந்தையை இழந்த பிள்ளைகள் தொடா்பான தகவல்கள் பெறப்பட்டு மாவட்ட மட்டத்தில் அந்த திட்டம் செயற்படுத்தப்படும்.

அதேபோல் விசேட தேவையுடையோா் மற்றும் பாடசாலை மாணவிகளுக்காக விசேட பேருந்து ஒன்றை யாழ்ப்பாணம்- கிளிநொச்சி மாவட்டங்களுக்கிடையில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விசேட தேவையுடையோருக்கான வசதிகளுடன் கூடியதாகவும், பாடசாலை மாணவிகள் பாதுகாப்பாக பயணிக்க கூடியதாகவும் இந்த பேருந்து அமைந்திருக்கும்.

ஆசனங்கள் இல்லாமல், சக்கர நாற்காலியுடன் ஒருவா் அப்படியே பேருந்துக்குள் ஏறி பாதுகாப்பாக பயணிக்க கூடிய வகையில் பேருந்து அமைந்திருக்கும்.

இந்த பேருந்து சேவையும் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஆளுநா் மேலும் கூறினாா்.

You might also like