வவுனியாவில் பிரம்மாண்ட விளையாட்டு நிகழ்வு! அதிரப்போகும் வவுனியா!!

வவுனியாவில் இயங்கும் (IT) தனியார் நிறுவனத்திற்கு கணணி துறையில் ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக வேலைக்கு தேவை

தொடர்புகளுக்கு : – 0778494381 , 0770805546 , 0757979492 , 0242052490 , 0242229151

எதிர்வரும் 11.08.2019 இல் வவுனியா கற்பக புரம் New one விளையாட்டு மைதானத்தில் 32 கழகங்கள் பங்குபற்றும் “இளைஞர்கள் எழுற்சிக் கிண்ணம் – 2019” எனும் பெயரில் மென்பந்தாட்ட போட்டி நிகழ்வு சிறப்பாக இடம்பெற ஏற்பாடாகியுள்ளதாக விளையாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள ஊடகக் குறிப்பில்

தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா மாவட்ட கிளையின் பிரதான அனுசரணையுடன் நடாத்தப்படும் இவ் விளையாட்டு போட்டியானது வவுனியா மாவட்டத்தின் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களை தீய சிந்தனைகள் மற்றும் தீய
செயற்பாடுகளிலிருந்து சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடும். அற்ப சலுகைகளுக்காக வேற்று இன (முஸ்லிம்) அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் இளைஞர்களை ஒன்றிணைந்து அவர்களை தமிழ் சேசியத்தின் பாலும் தமிழ் உணர்வுடனும் பயணிக்க வைப்பதற்கான ஒரு களத்தை உருவாக்கி சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் நடாத்தப்படுகின்றது.

அதைவிடவும் விளையாட்டுக்குரிய சரியான சீருடையோ உபகரணங்களோ அற்றநிலையில் விளையாடும் இளைஞர்களுக்கு எங்களால் இயன்ற உதவிகளை வழங்குவதுடன் அவர்களின் விளையாட்டு கழகங்களின் வளர்ச்சிக்கான அடித்தளத்தையும் இடும் முயற்சியாக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துகின்றோம்.

விடுமுறை நாட்களில் இளைஞர்கள் விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றில் பங்குபற்றும்போது போதைப்பொருள் பாவனைபோன்ற சில உடல்நலத்திற்கு கேடான பழக்கங்களிலிருந்து விலகி இருப்பதும் இவ்வாறான போட்டிகளின் பலன்களின் ஒன்றாகவுள்ளது. எனவும்

இப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு 11.08.2019 அன்று காலை 9.00 மணிக்கு வவுனியா கற்பகபுரம் New one விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக இடம்பெறவுள்ளதாகவும் இவ் நிகழ்விற்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் , பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கொடையாளிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளகாவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு இடம்பெறும் இந்த நிகழ்விற்கு வவுனியாவை தளமாக கொண்டு இயங்கிவரும் முன்னணி இணையத்தளங்களான தமிழ் தேசிய செய்திகள் (tnn.lk) , தினச்சுடர் ( thinachsudar.com) , நியுஸ்வன்னி( newsvanni.com) , வன்னி பிபிசி செய்திகள் ( vannibbc.com) , கிளிநொச்சிநெற் ( kilinochchinet.lk)என்பன ஊடக அனுசரணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like