யாழில் இருந்து சுற்றுலா சென்றவர்களிடம் ஆயுதம்? 119க்கு வழங்கப்பட்ட தகவல்

வவுனியாவில் இயங்கும் (IT) தனியார் நிறுவனத்திற்கு கணணி துறையில் ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக வேலைக்கு தேவை

தொடர்புகளுக்கு : – 0778494381 , 0770805546 , 0757979492 , 0242052490 , 0242229151

யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்புக்கு சுற்றுலா வந்தவர்களின் வாகனத்தில் ஆயுதங்கள் இருப்பதாக அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகள் காரணமாக அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரித்தானியாவில் இருந்து யாழ்.குடாவுக்கு வந்தவர்கள் மட்டக்களப்பிற்கு சுற்றுலா ஒன்றினை நேற்று முன்தினம் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று முன்தினம் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த அவர்கள் நேற்று உல்லைப்பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று திரும்பியுள்ளனர்.

சுற்றுலா சென்று திரும்பியவர்கள் காத்தான்குடி பகுதியில் கடைகளில் பொருட்கள் கொள்வனவு செய்துகொண்டிருந்த போது வெளிநாட்டில் இருந்து வந்த பெண்களின் ஆடை தொடர்பில் சிலர் அங்கு கருத்துகள் கூறிய நிலையில், சுற்றுலா சென்று வந்தவர்கள் அவர்களுடன் முரண்பட்ட பின் மட்டக்களப்புக்கு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை 119 ஊடாக குறித்த வானின் இலக்கம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டு குறித்த வானில் ஆயுதங்கள் கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று காலை குறித்த விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், வானிலும் தீவிர சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் எந்தவித சந்தேகப்படும்படியான பொருட்களும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பொலிஸார் அங்கிருந்தவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதுடன், குறித்த வான் பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு சோதனையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like