சற்று முன் வவுனியா செட்டிக்குளத்தில் பாடசாலை மாணவனை மோதித்தள்ளிய முச்சக்கரவண்டி

வவுனியாவில் இயங்கும் (IT) தனியார் நிறுவனத்திற்கு கணணி துறையில் ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக வேலைக்கு தேவை

தொடர்புகளுக்கு : – 0778494381 , 0770805546 , 0757979492 , 0242052490 , 0242229151

வவுனியா செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் இன்று (08.10.2019) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவணோருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செட்டிக்குளம் – வீரபுரம் பகுதியில் அமைந்துள்ள அம்மன் ஆலயத்திற்கு அருகே காணப்படும் வீதி வளைவுக்கு அருகே முச்சக்கரவண்டியோன்று வேகமாக வந்துள்ளது.

முச்சக்கரவண்டிக்கு எதிர் திசையில் மோட்டார் சைக்கிளில் வந்த பாடசாலை மாணவன் முச்சக்கரவண்டி வேகமாக வருவதினை அவதானித்து வீதிக்கு கீழே மோட்டார் சைக்கிளினை இறக்கியுள்ளான். எனினும் முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து மோட்டார் சைக்கிளினை மோதித்தள்ளியது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 19வயதுடைய பாடசாலை மாணவணோருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You might also like