கிளிநொச்சி இரணைமடுவில் சிறுவன் உட்பட 7 பேர் கைது : நடந்தது என்ன?

வவுனியாவில் இயங்கும் (IT) தனியார் நிறுவனத்திற்கு கணணி துறையில் ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக வேலைக்கு தேவை

தொடர்புகளுக்கு : – 0778494381 , 0770805546 , 0757979492 , 0242052490 , 0242229151

கிளிநொச்சி இரணைமடு குளத்தில் சட்ட விரோதமாக இரால்பிடியில் ஈடுபட்ட 6பேர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இரணைமடு குளத்தில் இன்று பகல் 7 பேர் இவ்வாறு சட்டவிரோத முறையில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

அரசினால் தடை செய்யப்பட்ட தங்கூசி வலையை பயன்படுத்தி இவ்வாறு குறித்த நபர்கள் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் அவர்களை இரணைமடு நன்னீர் மீனவர் சங்க அங்கத்தவர்கள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

குறித்த ஏழு பேரில் ஒருவர் 13 வயது சிறுவன் என்பதால் அவரை எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்த அதேவேளை ஏனைய ஆறுபேரையும் கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதன்போது அவர்களிடமிருந்து சுமார் 30 கிலோ இரால் மற்றும் தங்கூசி வலை என்பவற்றுடன் உள்ளுர் உற்பத்தி கட்டுத்துவக்கும் மீட்கப்பட்டதுடன், அவற்றையும் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முப்படுத்த உள்ளதாக கிளிநொச்சி பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

You might also like