இன்றைய ராசிபலன் 11.08.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்றைய ராசிபலன் 11.08.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.

இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்:

சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். பிற்பகலுக்கு மேல் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். மற்றவர்களால் மன அமைதி குறையக்கூடும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உயர் பதவியில் இருப்பவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்:

புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறு சிறு தடைகள் ஏற்படும்.

மிதுனம்:

வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். எதிர்பாராத பண வரவும் உண்டு. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் ஆதாயம் கிடைக்கும்.

கடகம்:

கடக ராசிக்கு இன்றைய ராசி பலன் படி வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கக்கூடும். தந்தையுடன் இருந்து வந்த பிணக்குகள் தீருவதற்கான வாய்ப்பு ஏற்படக்கூடும். தாயிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். அலுவலகப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துர்கை வழிபாட்டால் நன்மை பெறலாம்.

சிம்மம்:

சிலருக்கு குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

கன்னி:

அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலரால் மனச் சங்கடமும் குழப்பமும் ஏற்படக்கூடும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குருவின் அருளால் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்.

துலாம்:

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தாய் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.

விருச்சிகம்:

அரசு அதிகாரிகளுடன் கருத்துவேறுபாடும் மனக் கசப்பும் உண்டாகும். காலையில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம்.வெளியில் செல்லும்போது பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படக்கூடும்.

தனுசு:

வெளியில் செல்லும்போது பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. பிற்பகலுக்கு மேல் சிலருக்கு எதிர்பாராத சந்திப்பு மகிழ்ச்சி தரும் உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு உண்டு.

மகரம்:

இன்று உற்சாகமான நாளாக அமையும். பிற்பகலுக்கு மேல் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். வெளியூரில் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் சுபச் செய்தி வந்து சேரும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளின் சந்திப்பும் காரிய அனுகூலமும் உண்டாகும்.

கும்பம்:

தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று புதிய முயற்சிகளைத் தொடங்கலாம்.

மீனம்:

உற்சாகமான நாளாக அமையும். இன்றைக்கு வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு மகிழ்ச்சி தரும். கணவன் – மனைவி இடையில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

You might also like