வவுனியாவில் ஹெல்மட் அணியாது சென்ற விக்கினேஸ்வரனின் ஆதரவாளர்கள் : வேடிக்கை பார்த்த பொலிஸார்

வவுனியாவில் ஹெல்மட் அணியாது சென்ற விக்கினேஸ்வரனின் ஆதரவாளர்கள் : வேடிக்கை பார்த்த பொலிஸார்

வவுனியா ஏ9 வீதியில் ஹெல்மட் அணியாது ஊர்வலமாக சென்ற மோட்டர் சைக்கிள்களை போக்குவரத்து பொலிசார் மறித்த போதும், அவை நிறுத்தாமல் சென்றபோது போக்குவரத்து பொலிசார் வேடிக்கை பார்த்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது.

வவுனியாவிற்கு தமிழ் மக்கள் கூட்டனியின் அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக முன்னாள் முதலமைச்சரும், கட்சியின் செயலாளர் நாயகமாகிய சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் வருகைதந்தார். இதன்போது கட்சி ஆதரவாளர்கள் அவரை மோட்டர் சைக்கிள் பவனியாக அழைத்து சென்றனர்.

வவுனியா, தாண்டிகுளம் முருகன் ஆலய முன்றலில் இருந்து மன்னார் வீதி நான்காம் கட்டை வரை குறித்த மோட்டர் சைக்கிள் பவனி இடம்பெற்றது. இதன்போது தமிழ் மக்கள் கூட்டனியின் இளைஞர் அணித் தலைவர் உள்ளிட்ட சிலர் மோட்டர் சைக்கிளில் தலைகவசம் அணியாது பயணித்தனர்.

ஏ9 வீதி புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் கடமையில் நின்ற போக்குவரத்து பொலிசார் குறித்த மோட்டர் சைக்கிள் பவனியை அவதானித்து தலைகவசம் அணியாது சென்றவர்களை வழிமறித்தனர். ஆனால் மோட்டர் சைக்கிளில் சென்றவர்கள் நிறுத்தாது சென்றனர்.

இதன்போது வாகனம் ஒன்றில் வந்த பிரமுகர் குறித்த இளைஞர்கள் முன்னாள் முதலமைச்சரை அழைத்துச் செல்வதாக பொலிசாருக்கு தெரியப்படுத்தினார். இதன்போது போக்குவரத்து பொலிசார் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர்.

You might also like