பிச்சை எடுத்து தெருவில் உறங்கிய இளைஞர் : 21 வயதில் மில்லியனராக மாறிய சுவாரஷ்யம்!!

பிச்சை எடுத்து தெருவில் உறங்கிய இளைஞர் : 21 வயதில் மில்லியனராக மாறிய சுவாரஷ்யம்!!

அவுஸ்திரேலியாவில் பிச்சை எடுத்து தெருவில் உறங்கிய இளைஞர், 21 வயதிலே மில்லியனராக மாறியுள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஹாரி சாண்டர்ஸ் என்கிற 21 வயது இளைஞர் சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்தி 1.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலருக்கு சொந்தமானவராக உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், வாழ்க்கையில் பலர் வெற்றிபெற விழித்திருந்து இரவு முழுவதும் வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. உங்களுக்கு மனஅழுத்தம் இருந்தால் நீங்கள் ஒரு தொழிலை நடத்த முடியாது.

அதிகாலை 3 மணி வரை உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்ப்பதை நிறுத்திவிட்டு ஓய்வெடுங்கள். இதனால் நீங்கள் சிறந்தவராக இருக்க முடியும். நான் ஒரு போதும் உயர்ந்த ரக ஆடைகள் மற்றும் கோட் ஷூட்களை அணிந்து கிடையாது. எனக்கு பிடித்தமான ஆடைகளை மட்டுமே அணிந்து வருகிறேன். விலையுயர்ந்த ஆடைகளை அணிவது மற்றவர்களுக்கு தவறான எண்ணத்தை விட்டுவிடக்கூடும், முடிந்த வரை நான் அதிக நேரம் தூங்குவேன்.

என்னுடைய 16 வயதிலே எஸ்சிஓ தொழில்நுட்பத்தில் இருந்த ஆர்வத்தால், சொந்தமாக ஸ்டுடியோஹாக் என்னும் இணையதளத்தை உருவாக்கினேன். ஆனால் பணத்தை இழந்த பிறகு என்னுடைய கனவு சோகமாக மாறியது.

அது என்னுடைய வாழ்க்கையில் மிகவும் கடினமான, நான் பயந்திருந்த காலகட்டம். தங்குவதற்கு வீடு இல்லாமல் கிடைக்கும் இடங்களில் தங்குவேன். கடைகளில் மிச்சமாகும் உணவை கேட்பேன். அங்கிருக்கும் பெரும்பாலானவர்கள் மகிழ்ச்சியுடன் சாப்பிட வேண்டிய பொருட்களை எனக்குத் தருவார்கள்.

அந்த சமயத்தில் தான் சில விலைமதிப்பற்ற பாடங்களை நான் கற்றுக்கொண்டேன். அந்த சம்பவங்கள் என்னை ஒரு மில்லியனராக மாற்ற உதவியது. என்னிடம் பணம் இல்லாமல் இருந்தாலும், அதிர்ஷ்டவசமாக, நான் கற்றுக்கொண்ட திறன்களை ஒருபோதும் மறக்கவில்லை. 2017ம் ஆண்டு மீண்டும் என்னுடைய இணையதளத்தை புதுப்பித்து வேலை செய்ய ஆரம்பித்தேன். அது இப்போது வெற்றியில் முடிந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

You might also like