வவுனியா இராணுவ முகாமிற்கு அருகில் வைத்தியசாலை கழிவுப்பொருட்கள் : எவ்வாறு வந்தது?

வவுனியா இராணுவ முகாமிற்கு அருகில் வைத்தியசாலை கழிவுப்பொருட்கள் : எவ்வாறு வந்தது?

வவுனியா – மன்னார் வீதி, பூவரசங்குளம் பம்பைமடு இராணுவ முகாமிற்கு 100 மீற்றர் தொலைவில் வைத்தியசாலை கழிவுப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நோயாளர்கள் பயன்படுத்தும் சிறிஞ்சி மற்றும் சேலோன் போத்தல்கள் கழிவுப் பொருட்களாகவும், புதிய நிலையிலும் காணப்படுகின்றன.

அரச வைத்தியசாலை அல்லது தனியார் வைத்தியசாலையிலிருந்து பம்பைமடுப் பகுதிக்கு இக்குப்பைகளை எடுத்துச் செல்லும் போது இவ்வாறு வீதியோரமாக தவறி வீழ்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலையின் கழிவுப்பொருட்கள் பம்பைமடு இராணுவ முகாம் அருகே காணப்படுவதால் அப்பகுதியிலுள்ள மக்களிடம் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

You might also like