நல்லூர் ஆலய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான மூன்று இளைஞர்கள் : பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!!

நல்லூர் ஆலய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான மூன்று இளைஞர்கள் : பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!!

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்கள் நேற்றிரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய குறித்த மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் கிளிநொச்சி மற்றும் முழங்காவில் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட மூவரும் முஸ்லிம் இளைஞர்கள் என்பதால், நல்லூர் ஆலயத்திற்கு ஏன் வந்தார் என்பது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

You might also like