க.பொ.த சாதாரண தர பரீட்சையில் இலங்கையில் 3ஆம் இடம்பிடித்த மாணவனின் எதிர்கால இலட்சியம்

அகில இலங்கை ரீதியில் 3ஆவது இடத்தினை பெற்ற மாணவன் எதிர்காலத்தில் சிறந்த வைத்தியராக வருவதே எனது இலட்சியம் என தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்றைய தினம் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.

அதன்படி கொழும்பு ஆனந்தா வித்தியாலயத்தின் ஆர்.எம்.சுகத் ரவிது மற்றும் மாத்தறை ராஹுல வித்தியாலயத்தின் திமுத் என்ற மாணவர்கள் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.

ராஹுல வித்தியாலயத்தின் திமுத் என்ற மாணவனின் தாய் மருந்தகம் ஒன்றில் பணிபுரிவதாகவும், தந்தை முதன்மை கணக்கலராக பணியாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனது பெற்றோர்களின் அயராத உழைப்பே எனது சிறந்த பெறுபேற்றிக்கு காரணம் என அந்த மாணவன் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவருடைய சகோதரர் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் கல்வி கற்று வருகின்றதாக கூறியுள்ளார்.

You might also like