வவுனியாவில் மோட்டார் சைக்கிலினுள் புகுந்த வெள்ளைநிற நாகப்பாம்பினால் பதட்ட நிலை : பார்வையிட குவிந்த மக்கள் கூட்டம்

வவுனியாவில் மோட்டார் சைக்கிலினுள் புகுந்த வெள்ளைநிற நாகப்பாம்பினால் பதட்ட நிலை : பார்வையிட குவிந்த மக்கள் கூட்டம்

உலகத்தில் உயிருள்ளதும் உயிரற்றதும் என எல்லாமே இறைவனின் அம்சமாகவே உள்ளது. அதுவும் சனாதன தர்மமாகிய இந்து மதத்தில் மனிதர்களைத் தாண்டி அநேகமாக எல்லா உயிர்களுக்குமே இறைவனின் அம்சமாகவே கருதி வழிபடக்கூடிய ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

அதிலும் கடும் விஷம் கொண்ட, சிவ பெருமானின் விருப்பத்திற்குரிய நாகப் பாம்பை பயம் கலந்த மரியாதையுடன் இந்துக்கள் அனைவருமே வழிபடுகின்றனர். அந்த வகையில் ஒரு அபூர்வ நாகம் ஒரு கோவிலில் பல நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு தரிசனம் தந்த காட்சியே இது.

வவுனியா தாண்டிகுளம் பகுதியில் வெள்ளைநாகம் ஒன்று வீதிக்கு வந்தமையால் அதனை பார்வையிட மக்கள் ஒன்றுகூடிய சம்பவம் ஒன்று இன்று (14.08.2019) காலை இடம்பெற்றது.

இன்று காலை தாண்டிக்குளம் ஒண் மாட் உணவகத்திற்கு அருகில் வயல்வெளியில் இருந்து வெள்ளை நாகம் ஒன்று வீதிக்கு வந்துள்ளது. வீதியால் சென்ற அனைவரும் தமது வாகனங்களை நிறுத்திவிட்டு குறித்த பாம்பினை பார்வையிட குவிந்தனர்.

குறித்த பாம்பு வீதியில் நின்ற மோட்டார் சைக்கிள் ஒன்றிற்குள் சென்று ஒழிந்து கொண்டது. இதனால் அதனை வெளியில் எடுத்து விடும் நோக்குடன் உணவகத்திற்கு அருகில் உள்ள சாந்தசோலை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு குறித்த மோட்டார் சைக்கிள் கொண்டு செல்லபட்டது.

அங்கு நின்ற ஒருவர் நாகபாம்பினை கையினால் பிடித்து எடுத்து ஆலயத்தில் விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவத்தினால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டிருந்ததுடன் ஏ9 வீதியில் சற்று நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like