வவுனியாவில் இனந்தெரியாத நபர்களினால் ஆலயத்தின் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை

வவுனியா – உக்கிளாங்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு அதிலுள்ள பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இன்று 29 அதிகாலை இனந்தெரியாத நபர்களால் குறித்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆலயத்தில் இன்று காலை பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளச் சென்றபோதே ஆலயத்தில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளது.

ஆலய நிர்வாகத்தினரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை திருட்டு சம்பவங்கள் சி.சி.டி.வி கமராவில் பதிவாகியுள்ளமையினால் பொலிஸாரினால் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

 

You might also like