மனைவி திரும்பிவருவாரா? 12 வயது மகனுடன் வேதனையோடு காத்திருக்கும் கணவனின் பரிதாபநிலை!!

மனைவி திரும்பிவருவாரா? 12 வயது மகனுடன் வேதனையோடு காத்திருக்கும் கணவனின் பரிதாபநிலை!!

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் தன் மனைவியை திரும்ப கிடைப்பாரா என்று தன் 12 வயது மகனுடன் கணவன் காத்திருக்கும் சம்பவம் நெஞ்சை உருக்க வைத்துள்ளது. கேரளாவில் கடந்த ஒரு வாரகாலமாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த 8ஆம் திகதி, வயநாட்டிலுள்ள பச்சக்காடுமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கிருந்து வீடுகளோடு அதில் வாழ்ந்து வந்த மக்களும் அடியோடு புதைந்துவிட்டனர்.

இதுவரை பத்து பேரின் உ டல்கள் அங்கிருந்து அதிகாரிகள் மீட்டுள்ளனர். இன்னும் எட்டு பேரின் உ டல் நிலச்சரிவில் புதைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில், லாரன்ஸ் என்பவரின் மனைவி ஷைலாவும் புதைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதனால் லாரன்ஸ் தன் மனைவி திரும்ப வருவாரா தன்னுடைய 12 வயது மகனுடன் முகாமில் காத்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், வெள்ளத்தால் சூழப்பட்டு வரும் எங்களது வீட்டிலிருந்து மனைவியையும், மகனையும் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்வதற்கான வழியை தேடுவதற்காக அவர்களை வீட்டில் விட்டு சென்றேன்.

கிட்டத்தட்ட அரைமணிநேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது, வீடு வெள்ளத்தில் சூழப்பட்டுவிட்டது. அங்கு என் மனைவி மற்றும் மகனை அங்கு காணவில்லை, தற்போது என்னுடைய 12 வயது மகனை கண்டுபிடித்துவிட்டேன், அவனுடன் தான் இப்போது வயநாட்டில் இருக்கும் நிவாரண முகாமில் தங்கியிருக்கிறேன் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

You might also like