எனது மொத்த உயிரும் மண்ணுக்குள் புதைந்து விட்டது : மகன், காதல் மனைவியை பறிகொடுத்த இளைஞன் கதறல்!!

எனது மொத்த உயிரும் மண்ணுக்குள் புதைந்து விட்டது : மகன், காதல் மனைவியை பறிகொடுத்த இளைஞன் கதறல்!!

இந்திய மாநிலம் கேரளாவில் நிலச்சரிவில் காதல் மனைவி உள்ளிட்ட மொத்த குடும்பத்தையும் இளைஞர் ஒருவர் பறிகொடுத்த சம்பவம் வெளியாகி கண்கலங்க வைத்துள்ளது.

கேரளாவின் மலப்புரம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவிலேயே சரத் என்ற இளைஞரின் மொத்த குடும்பமும் நிலச்சரிவில் சிக்கி பலியாகியுள்ளது.

சம்பவத்தன்று மதியம் மனைவி மற்றும் ஒன்றரை வயது மகனுடன் ஒன்றாக சாப்பிட அமர்ந்துள்ளார் சரத். அப்போது சாலை அருகே இருந்து மழைவெள்ளம் குடியிருப்புக்குள் புகுந்துள்ளது. இதைக்கண்ட சரத் மனைவி கீதுவிடம், அழும் மகனுக்கு உணவு தர சொல்லிவிட்டு, வீட்டுக்கு வெளியே மழை வெள்ளத்தை திருப்பி விட தாயாருடன் சென்றுள்ளார்.

ஆனால் அந்த சில நிமிடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சரத்தின் குடியிருப்பு மண்ணுக்குள் புதைந்துள்ளது. தற்போது ஒன்றாக அமர்ந்து சாப்பிட தம்முடன் யாரும் இல்லை என கதறும் சரத்தின் முகம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

வெள்ளியன்று மலப்புரம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சரத்தின் ஒன்றரை வயது மகன், மனைவி மற்றும் தாயார் என உயிருக்கு உயிரான குடும்பம் மொத்தமும் மண்ணில் புதைந்துள்ளது.

சரத் மட்டும் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். இச்சம்பவத்தை அடுத்து தொடர்ந்து 2 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின்னரே மனைவி கீது மற்றும் மகன் த்ரூவனின் சடலங்களை மீட்டுள்ளனர்.

நேற்று தாயார் சரோஜினியின் சடலம் மீட்டுள்ளனர். தந்தை சத்யன் மற்றும் சகோதரன் சஜின் ஆகியோர் சம்பவத்தின் போது வெளியே சென்றிருந்ததால் அவர்கள் உயிர் தப்பியுள்ளனர். காதல் திருமணம் செய்துகொண்ட சரத், மனைவி மற்றும் தாயார் உள்ளிட்ட குடும்பத்துடன் வாடகை குடியிருப்பிலேயே தங்கி வந்துள்ளார்.

பொங்கி வந்த மழை வெள்ளத்தை திருப்பி விடும்போது பலத்த சத்தம் கேட்டதாகவும், ஆனால் அது தமது மொத்த குடும்பத்தையும் கொண்டு செல்லும் என தெரியாமல் போனது என சரத் கண்கலங்கியுள்ளார்.

You might also like