யாழில் மீண்டும் வாள்வெட்டு : மூவர் வைத்தியசாலையில்
யாழ். வடமராட்சி துன்னாலைப் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு பகுதியினருக்கு இடையில் இடம்பெற்ற மோதல் பின்னர் கோஷ்டி மோதலாக மாறியுள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ள நிலையில், பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.