சொகுசு காருக்கு தீ வைக்கப்பட்டதால் திருகோணமலையில் ஏற்பட்ட பதற்றம்! 20 பேர் கைது

சொகுசு காருக்கு தீ வைக்கப்பட்டதால் திருகோணமலையில் ஏற்பட்ட பதற்றம்! 20 பேர் கைது

திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதி அலஸ்தோட்டம் பகுதியில் விபத்து ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படும் சொகுசு காரொன்றை சேதப்படுத்தி பதற்ற நிலையை தோற்றுவித்த சம்பவம் தொடர்பில் 20 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளர்.

குறித்த சந்தேகநபர்கள் இன்றைய தினம் காலை செய்யப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு தீவிர விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அலஸ்தோட்டம் பகுதியில் நேற்றிரவு சொகுசு கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை நகர் பகுதியில் இருந்து நிலாவெளி நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு காரே வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியையும், துவிச்சக்கர வண்டியையும் மோதிவிட்டு அருகில் நின்ற பெண்ணுடன் மோதியதாக தெரியவருகின்றது.

இதனால் கோபம் கொண்ட பிரதேச மக்கள் காருக்கு தீ வைத்ததாகவும் இதனால் அந்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்நிலையில், விபத்துடன் தொடர்புடைய சாரதியை கைது செய்யப்பட்டிருந்த போதும், சொகுசு காரை சேதப்படுத்தி பதற்ற நிலையை தோற்றுவித்த சந்தேகநபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

You might also like