இன்றைய ராசிபலன் 16.08.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்றைய ராசிபலன் 16.08.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.

இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்:

அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்கு மேல் காரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் நன்மைகள் ஏற்படக்கூடும்.

ரிஷபம்:

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். உற்சாகமான நாள். அதிகாரிகளின் சந்திப்பும் காரிய அனுகூலமும் உண்டாகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும்.

மிதுனம்:

சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடப்பதில் தாமதம் ஏற்படும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறிய அளவில் ஆதாயம் கிடைக்கும்.

கடகம்:

சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். தெய்வப் பணிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும். சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

சிம்மம்:

நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளியூர்களிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வரும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் தடை தாமதம் ஏற்படும்.

கன்னி:

புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படக்கூடும்.

துலாம்:

உற்சாகமான நாள். எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். பிறருடன் வாக்குவாதம் தவிர்க்கவும். பிள்ளைகளால் பெருமை சேரும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

விருச்சிகம்:

உறவினரிடம் இருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு குடும்ப விஷயம் தொடர்பாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரியோர்களின் ஆசிகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்.

தனுசு:

தனுசு ராசிக்கு இன்றைய ராசி பலன் படி பிற்பகலுக்குமேல் தாய் வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். உங்கள் தேவை அறிந்து மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக இருக்கும். மாலை நேரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் சேரும்.

மகரம்:

பணியின் காரணமாக சிலர் வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

கும்பம்:

மனம் உற்சாகமாகக் காணப்படும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் ஆசிகளும் அனுக்கிரகமும் உண்டாகும்.

மீனம்:

எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

You might also like