அவுஸ்திரேலியாவில் ஆபத்தான கட்டத்தில் இருக்கும் தமிழ் குடும்பம்!!

அவுஸ்திரேலியாவில் ஆபத்தான கட்டத்தில் இருக்கும் தமிழ் குடும்பம்!!

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படவுள்ள தமிழ் குடும்பத்திற்கு சாதகமான பதில் வரக்கூடிய நிலை காணப்படுவதாக அந்நாட்டு கல்வி அமைச்சர் Dan Tehan அவர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ம் திகதி சொந்த நாடான சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சினால் அறிவிக்கப்பட்ட ராஜசேகரன் குடும்பத்தின் சார்பில் ராஜசேகரனின் புதல்வி வாணிசிறீ அவுஸ்திரேலிய மக்களிடம் பகிரங்க உதவியை நாடியிருந்தார்.

தந்தையின் உடல்நிலையின் அடிப்படையில் நாடுகடத்தப்படவுள்ள தமது குடும்பம் அவுஸ்திரேலியாவில் தொடர்ந்து வசிக்க விரும்புவதாகவும் அவுஸ்திரேலிய சமூகத்துக்கு சேவையாற்றுவது தனது இலட்சியம் என்றும் கூறியிருந்தார். தனது கல்வி நிலமை தொடர்பாகவும் தனது எதிர்காலத்திட்டங்கள் குறித்து பகிரங்கமாகக்கூறி அவுஸ்திரேலிய மக்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் வாணிசிறி கோரியிருந்தார்.

இதன்பிரகாரம், ராஜசேகரன் குடும்பத்துக்கு ஆதரவாக அவுஸ்திரேலிய மட்டத்தில் பெரும் ஆதரவு எழுந்தது. அவர்களை நாடுகடத்தக்கூடாது என்று கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டது. அரசு மட்டத்தில் இது தொடர்பில் பேசுவதற்கான தொடர்புகளும் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ராஜசேகரன் குடும்பம் வசிக்கும் மெல்பேர்ன் மேற்கு பிரதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் கல்வி அமைச்சருமான Dan Tehan கருத்து தெரிவிக்கும்போது, ராஜசேகரன் குடும்பத்தினரின் விவகாரம் குறித்து குடிவரவு அமைச்சுத்தான் இறுதி முடிவு எடுக்கவேண்டும்.

என்றாலும் சமூக மட்டத்தில் அந்தக்குடும்பத்துக்கு எழுந்துள்ள ஆதரவும் அந்தக்குடும்பம் அவுஸ்திரேலிய சமூகத்துக்கு வழங்கிய பங்களிப்பு குறித்தும் கருத்திற்கொள்ளும்போது அவர்களுக்கு சாகமான பதில் வருவதற்கு வாய்புள்ளது என்று கூறியுள்ளார். இந்த வார இறுதியில் அரசு தனது முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like