வவுனியாவில் வாடிக்கையாளர்களுக்கு டொபி வழங்கும் வர்த்தக நிலையங்கள் : அதிகாரிகளின் கவனத்திற்கு

வவுனியா வர்த்தக நிலையங்களில் மிகுதி சில்லறைப் பணத்திற்கு பதிலாக ரொபி: மக்கள் விசனம்

வவுனியாவில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகுதி சில்லறைப் பணத்திற்கு பதிலாக ரொபி வழங்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா நகரம், வைரவபுளியங்குளம், குருமன்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்த பின் வருகின்ற மிகுதிச் சில்லறைப் பணங்களை குறித்த வர்த்தக நிலையத்தினர் வழங்குவதில்லை.

பதிலாக ரொபி வழங்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் சில வர்த்தக நிலையங்கள் மிகுதிப் பணம் தொடர்பில் கவனம் செலுத்தாது மிகுதிப் சில்லறை இல்லை எனக் கூறி பணம் செலுத்துவதில்லை. இது தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் மற்றும் வவுனியா வர்த்தக சங்கத்தினர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like