வட்டிப்பணம் கேட்டு வந்த தொழிலதிபர் உலக்கையால் அ டித்துக் கொ லை – சி.சி.ரி.வி கமறாவில் சிக்கிய ஆதாரம்!

வட்டிப்பணம் கேட்டு வந்த தொழிலதிபர் உலக்கையால் அ டித்துக் கொ லை – சி.சி.ரி.வி கமறாவில் சிக்கிய ஆதாரம்!

வட்டிப்பணம் கேட்டுவந்த தொழிலதிபர் ஒருவரை கொ ன்று புதைத்த சம்பவம் ஒன்று புத்தளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த ப டுகொ லை சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது புத்தளம் செய்தியாளர் தெரிவித்தார்.

பின்னனி…

புத்தளம் நல்லந்தலுவவைச் சேர்ந்த தென்னந்தோட்டத்தின் உரிமையாளரான தொழிலதிபர் ஏ.ஆர்.எம்.சஃபிஸ் என்ற வர்த்தகர் அவரது பிரதேசத்தில் வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 11 ஆம் திகதியிலிருந்து அவர் காணாமல் போனதையடுத்து புத்தளம் பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் விருதோடை குளத்தில் தலைக்கவசமொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு நேற்று கிடைத்த தகவலை அடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரிவி கமரா காட்சிகளை பரிசோதித்த பொலிஸார் புழுதிவயல் வெட் டுக்காடு பகுதியில் வீடொன்றை சோதனையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி அந்த வீட்டில் அண்மையில் வெட் டப் பட்டு மூடப் பட்ட குழி ஒன்றை புத்தளம் நீதிவானின் முன்பாக பொலிஸார் நேற்று மாலை தோன்டியுள்ளனர்.

இதன்போது காணாமல் போன தொழிலதிபர் கொ லை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் சட லமா க மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் தடிகள், சிரட்டைகளைக் கொண்டு உ டல் புதை க்கப்ப ட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கொ லைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொ லை இடம்பெற்ற வீட்டிலிருந்த சிசிரிவி கமறாவில் பதிவாகிய காட்சிகளின் அடிப்படையிலேயே சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.

வர்த்தகரின் வீட்டிற்கு சென்ற தொழிலதிபர் வட்டிப்பணத்தை கேட்டபோது இருவருக்குமிடையில் தர்க்கம் மூண்டதையடுத்து அது மோத லாகி, தொழிலதிபர் அடித்துக் கொல் லப்பட் டுள்ளமை சி.சி.ரி.வி கமறாவில் பதிவாகியுள்ளது.

10 இலட்சம் ரூபா பணத்தை வட்டிக்கு கொடுத்த நிலையில் 6 மாதங்களாகியும் 3 இலட்சம் ரூபா பணம் மாத்திரமே வழங்கியுள்ளதாக கூறி வீட்டு உரிமையாளருக்கு தெரியாமலேயே உறுதி எழுதியுள்ளார்.

இதனையடுத்து வீட்டு உரிமைப் பத்திரத்தை தருமாறும் தான் 5 இலட்சம் ரூபா பணம் தருவதாகவும் தெரிவித்து தனது வீட்டுக்கு வரவழைத்து உலக் கையினால் அ டித்து கொ லை செய்யப்படுள்ளார்.

இதன் அடிப்படையில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேறகொண்டுள்ளனர்.

You might also like