இன்றைய ராசிபலன் 17.08.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்றைய ராசிபலன் 17.08.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.

இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்:

எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும் பிற்பகலுக்குமேல் தாய் வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தியைக் கேட்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ரிஷபம்:

வெளியூர்களில் இருந்து நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வரும். தேவைக்கேற்ப பணம் கையில் இருக்காது. எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

மிதுனம்:

இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். சகோதரர்களால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனத்துடன் ஈடுபடவும். அரசாங்கக் காரியங்களில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

கடகம்:

வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். ஒரு சிலருக்குக் குடும்பத்துடன் புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கும்.

சிம்மம்:

உற்சாகமான நாள். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.

கன்னி:

எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். மனம் உற்சாகமாகக் காணப்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

துலாம்:

வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பிள்ளைகளால் பெருமை சேரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

விருச்சிகம்:

நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவார்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

தனுசு:

எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய முயற்சிகள் சாதகமாகும். மூலம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.

மகரம்:

மகர ராசிக்கு இன்றைய ராசி பலன் படி புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.

கும்பம்:

எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படக்கூடும்.

மீனம்:

அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த விஷயம் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

You might also like