மடுத்திருத்தலத்திற்குள் புத்தக பையுடன் உள்நுழைந்த தமிழ் இளைஞனை மடக்கிப்பிடித்த இராணுவம்; நடந்தது இதுதான்!

மடுத்திருத்தலத்திற்குள் புத்தக பையுடன் உள்நுழைந்த தமிழ் இளைஞனை மடக்கிப்பிடித்த இராணுவம்; நடந்தது இதுதான்!

மன்னார் மடு திருத்தலத்தில் புத்தக பையுடன் உள்நுழைந்த ஊடகவியலாளர் ஒருவரை இராணுவம் சுற்றிவளைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா கடந்த 6 ஆம் திகதி மாலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இருந்தது.

நேற்று மாலை வேஸ்பர் ஆராதனை ஒப்புக்கொடுக்கப்பட்டு அதனை தொடர்ந்து இன்று காலை சுமார் 6.30 மணியளவில் திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்பக்கொடுக்கப்பட்டுகொண்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த பெருவிழாவை காணொளி பதிவு செய்யும் பொருட்டு மடுத்திருத்தலத்திற்குள் கமரா உள்ளிட்ட ஊடகங்களுக்கு தேவையான சில பொருட்கள் அடங்கிய புத்தகப்பையுடன் உள் நுழைந்த இளம் ஊடகவியலாளரை இராணுவத்தினர் பதற்றமடைந்து சுற்றிவளைத்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியிருந்த நிலையில், விசாரணைக்கு பின் குறித்த ஊடகவியலாளரை காணொளி பதிவிற்கு அனுமதித்திருந்தனர்.

தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம்பெற்று திருச்சொரூப ஆசிர்வாதத்துடன் மடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like