1 கிலோ இரும்புப் பொருட்களை விழுங்கிய வாலிபர் : அதிர்ச்சித் தகவல்!!

1 கிலோ இரும்புப் பொருட்களை விழுங்கிய வாலிபர் : அதிர்ச்சித் தகவல்!!

தமிழ்நாடு – சேலத்தில் வாலிபர் ஒருவர் விழுங்கிய 1 கிலோ இரும்பு பொருட்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

சேலம் ஜோன்சன்பேட்டை பகுதியை சேர்ந்த செல்வக்குமார் (29). மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். இவர் இரும்பு பொருட்கள் ஏதும் கீழே கிடந்தால் அதை எடுத்து விழுங்குவதை பழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை செல்வக்குமாருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் அவரது பெற்றோர் செல்வக்குமாரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில் அவரது வயிற்றில் இரும்பு பொருட்கள், சில்லறை காசுகள் உள்பட பல பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து 3 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில் வாலிபர் வயிற்றில் இருந்து சில்லறை காசுகள், ஊசி, கம்பிகள், பிளேட் உள்பட பல பொருட்கள் அகற்றப்பட்டுள்ளது.

பின்னர் அகற்றப்பட்ட பொருட்களை எடை போட்டு பார்த்தபோது, இந்த இரும்பு பொருட்கள் 1கிலோ எடை இருந்ததை பார்த்து மருத்துவர்களும், செல்வக்குமாரின் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

You might also like