வவுனியாவில் வர்த்தகர்கள் இனிப்பு வழங்கினால் எம்மிடம் முறைப்பாடு செய்யுங்கள் : வர்த்தக சங்கம் அதிரடி அறிவிப்பு

வவுனியாவில் வர்த்தகர்கள் இனிப்பு வழங்கினால் எம்மிடம் முறைப்பாடு செய்யுங்கள் : வர்த்தக சங்கம் அதிரடி அறிவிப்பு

வவுனியாவில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகுதி சில்லறைப் பணத்திற்கு பதிலாக இனிப்புக்கள் வழங்கப்படுவதாக வெளியான செய்தியினையடுத்து வர்த்தகர்களுக்கு வவுனியா வர்த்தக சங்கத்தினர் அதிரடி அறிவிப்போன்றினை வெளியிட்டுள்ளனர்.

வர்த்தக நிலையங்களில் சில்லறைப் பணத்திற்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருவதன் காரணமாகவே மிகுதிச் சில்லறைப் பணத்திற்கு பதிலாக இனிப்புகளை வழங்குவதாக வர்த்தகர்கள் அவர்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

இதற்கு தீர்வு காணும் முயற்சியில் அரச மற்றும் தனியார் வங்கி முகாமையாளர்களுடன் வர்த்தக சங்கத்தினர் கலந்துரையாடி சில்லறை பணத்தினை பெறுவதற்குரிய நடவடிக்கையினை முன்னேடுத்துள்ளோம்.

சில்லறை பணம் தேவைப்படும் வர்த்தகர்கள் வர்த்தக சங்கத்தின் காரியாலத்தில் அலுவலக நேரங்களில் பெற்றுக்கொள்ள முடியும்

அத்துடன் இதற்கு பின்னரும் வர்த்தக நிலையங்களில் மிகுதி சில்லறைப் பணத்திற்கு பதிலாக இனிப்புக்கள் வழங்கினால் பொதுமக்கள் வர்த்தக சங்கத்தில் முறைப்பாட்டினை மேற்கொள்ளுமாறும் வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

You might also like