முல்லைத்தீவு மாவட்டத்தில் நிழல் குடைகள் இல்லை : மக்கள் குற்றச்சாட்டு
முல்லைத்தீவு நகரத்தில், பஸ் நிழல் குடைகள் போதியளவில் இல்லாமை காரணமாக, மரநிழல்களில் காத்திருக்கும் பயணிகள் வெயில், மழை காலங்களில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் முல்லைத்தீவு நகர அபிவிருத்திக் குழு, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரை சந்தித்துக் கலந்துரையாடியபோது நிழல்குடைகளை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்திருந்தது.
எனினும், முல்லைத்தீவு நகரத்தில் நிரந்தர பஸ் நிலையம் அமைக்கப்படாத நிலையில், பயணிகள் கால் கடுக்க, வீதிகளில் காத்திருந்து பயணிக்க வேண்டியுள்ளது.