போலி ஆவணங்களோடு சுவிஸில் புகலிடம் கேட்ட 377 இலங்கைத் தமிழர்கள்

போலி ஆவணங்களோடு சுவிஸில் புகலிடம் கேட்ட 377 இலங்கைத் தமிழர்கள்

இந்த வருடத்தில் மாத்திரம் 377 இலங்கைத் தமிழர்கள் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அரசியல்வாதிகள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளினால் அவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக போலி ஆவணங்கள் வழங்கி அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுலா வீசாவில் சுவிட்சர்லாந்துக்கு சென்றவர்களே இவ்வாறு புகலிடம் கோரியுள்ளனர். எனினும் இவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்த சுவிஸ் அரசாங்கம் மறுத்துள்ளது.

இந்த இலங்கை தமிழர்களின் ஆவணங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதாக சுவிஸ் புலம்பெயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

You might also like