வடக்கு கிழக்கில் இன்று பிற்பகலில் ஏற்படப்போகும் மாற்றம்! மக்களே அவதானம்

வடக்கு கிழக்கில் இன்று பிற்பகலில் ஏற்படப்போகும் மாற்றம்! மக்களே அவதானம்

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாக காணப்படுவதாக, வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சுமார் 75 மில்லி மீற்றர் வரையான பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் மேல் மாகாணங்களில் இடைக்கிடை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதோடு, மணிக்கு 70 – 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாக வீசும் பலத்த காற்றினாலும் மின்னல் தாக்கங்களினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

You might also like