ஒரே கேள்வியால் கோடியை இழந்து லட்சாதிபதியான பெண்!!

ஒரே கேள்வியால் கோடியை இழந்து லட்சாதிபதியான பெண்!!

ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியில், பெண்ணொருவர் 50 லட்சம் ரூபாய் பரிசை வென்றுள்ளார்.

பிரபல ஹிந்தி தொலைக்காட்சி ஒன்றில் ‘கோன் பனேகா க்ரோர்பதி’ என்ற நிகழ்ச்சியை, நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார்.

இந்நிகழ்ச்சியில், ஒவ்வொரு பரிசுத் தொகைக்கும் ஏற்றவாறு கேள்விகள் கேட்கப்படும். எனினும், போட்டியாளர்களில் பெரும்பாலானோர் சில லட்சங்களுடனேயே ஆட்டத்தை விட்டு வெளியேறிவிடுவர்.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சர்னா குப்தா என்ற பெண் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அமிதாப் பச்சன் கேட்ட கேள்விகளுக்கு தொடர்ந்து சரியான பதில்களை அளித்து வந்த அவர், படிபடியாக 50 லட்சம் ரூபாய் வரை வென்றார்.

அதன்பின்னர், ஒரு கோடி ரூபாய் பரிசுக்கான கேள்வி கேட்கப்பட்டது. 1944ஆம் ஆண்டில், காங்லா டோங்பி போர் இன்றைய எந்த இந்திய மாநில தலைநகருக்கு அருகில் நடந்தது? என்பதே அந்த கேள்வி. ஆனால், அந்த கேள்விக்கு சர்னா குப்தாவுக்கு பதில் தெரியாததால், அவர் 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையுடன் போட்டியில் இருந்து விடைபெற்றார்.

அந்த கேள்விக்கு இட்டாநகர், இம்பால், கவுகாத்தி, கொஹிமா என நான்கு விடைகள் தரப்பட்டன. அதில் இம்பால் என்பதே சரியான விடை ஆகும்.

எனினும் லட்சாதிபதியான சர்னா குப்தா, மத்திய பிரதேசத்தில் தொழிலாளர் துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like