அலட்சியத்தால் பறிபோகும் சிறு பிள்ளைகளின் உயிர் : வருகின்றது புதிய சட்டம்

பிற நபர் ஒருவரின் கவனயீனத்தினால் மரணமடைகின்ற சிறு வயதுடையவர்களின் பெற்றோர்களுக்கு நட்ட ஈடு வழங்கும் வகையில் சட்டம் ஒன்றை தயாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கவனயீனமான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களிடமிருந்து நட்ட ஈட்டு தொகையை பெற்றுக்கொண்டு பிள்ளைகளை பிரிந்து கஷ்டங்களை அனுபவிக்கும் பெற்றோர்களுக்கு கொடுக்கப்பட உள்ளது.

அதனடிப்படையில் குறித்த விடயம் தொடர்பில் சட்டம் ஒன்றை வரைவதற்கு சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

You might also like