இலங்கையில் மரண தண்டனை கைதிகள் ஏற்படுத்திய வரலாற்று சாதனை!

2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில பாட பரீட்சை எழுதிய 21 வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளில் 11 பேர் சித்தியடைந்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

சித்தி அடைந்த 11 பேரும் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளாகும்.

அவ்வாறு சித்தியடைந்த கைதிகளில் 4 பேர் B மற்றும் C சித்தியை பெற்றவர்களாகும். அவர்கள் 6 மற்றும் 9 வகுப்பில் கற்றவர்கள் என தெரியவந்துள்ளது.

சிறைக்கைதிகளுக்கு அவசியமான கற்கை நடவடிக்கைகளை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படித்த கைதிகளினால் வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக தொழில் ரீதியான ஆசிரியர்கள் அல்லது கல்வி அமைச்சின் தலையீடுகள் ஒன்றும் மேற்கொள்ளப்படவில்லை.

சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரால் நிஷான் வனசிங்க மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை அதிகார சந்தன ஏக்கநாயக்க ஆகியோரின் ஆலோசனைக்கமைய அவர்கள் அந்த பரீட்சை எழுதியுள்ளனர்.

சிறைச்சாலை வரலாற்றில் இதற்கு முன்னர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறான ஒரு சம்பவம் பதிவாகவில்லை என அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

You might also like