வவுனியாவில் வேலியினையுடைத்து காணிக்குள் புகுந்த நூற்றுக்குமேற்பட்டவர்கள் : பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

வவுனியாவில் வேலியினையுடைத்து காணிக்குள் புகுந்த நூற்றுக்குமேற்பட்டவர்கள் : பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

கா ணாமல் ஆ க்கப்பட்டோரின் போராட்டத்தின் போது ஓமந்தை சோதனை சாவடி இருந்த இடத்தில் தமது வேலி அகற்றப்பட்டதாக பெண் ஒருவர் முறைப்பாடு

கா ணாமல் ஆ க்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியா, ஓமந்தைப் பகுதியில் போராட்டம் மேற்கொள்ளப்பட்ட போது முன்னர் இ ராணுவ முகாம் அமைந்திருந்த பகுதியில் இருந்த தமது காணி வேலி அகற்றப்பட்டதாக பெண் ஒருவர் ஓமந்தைப் பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார்.

இன்று பிற்பகல் 3 மணியளவில் குறித்த முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட கா ணாமல் ஆ க்கப்பட்டோரின் சங்க உறுப்பினர்களை அழைத்த பொலிசார் இரு தரப்பினருடனும் கலந்துரையாடி இருந்தனர். இதன்போது இரு பகுதியினரும் பின்னர் சமாதானமாக சென்று விட்டனர்.

இதேவேளை, கா ணாமல் ஆ க்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்பட்ட போது போராட்டமானது ஓமந்தை, இறம்பைக்குளம் பகுதியில் வந்தடைந்த போது, அங்கு வைத்தே தமது பிள்ளைகளை ஒ ப்படைத்ததாக அப்பகுதியில் இருந்த காணி வேலியை அகற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள் உட்சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like